கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மங்குழியில் குஞ்சுமோன்(50) என்ற நபரை கைது செய்தனர். இவர் அப்பகுதியில் உள்ள பெந்தகோஸ்தே தேவாலயத்தில் பாதிரியாராக வருகிறார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை மதபோதகர் குஞ்சுமோன் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை ஆணையர் சுமதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத போதகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறை சிறையில் அடைத்திருக்கிறது.