ராகுல் காந்தி சிறை தண்டனை தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதுடன், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது இல்லத்தில் 50 எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் தகவல் தொடர்புத்துறை பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் க்ஷ தெரிவித்தார்.
சூரத் நீதிமன்றத்தால் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் ஏற்படும் சூழ்நிலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சி உயர்மட்ட தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார். அதே போல கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.