கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான பாலகிருஷ்ணன் 2015 முதல் 2022 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். பல முறை எம்எல்ஏவாக இருந்த இவர், 2006 முதல் 2011 வரை விஎஸ் அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். முன்னதாக, பாலகிருஷ்ணனின் உடல்நிலை கவலைக்கிடமானதால், ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்த தனது ஐரோப்பா பயணத்தை முதல்வர் பினராயி விஜயன் ஒத்திவைத்தார்.