ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ஆக்சிஜன் பொருந்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு மெக்சிகோவில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக லலித் மோடி தனது உடல்நிலை குறித்த அறிவிப்புகளை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்..
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில்; 3 வாரங்களுக்குப் பிறகு, இரண்டு வாரங்களில் இரண்டு முறை கொரோனா நோயுடன், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல் நிலையை விரைவில் குணமடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பதாகவும், தனக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து இறுதியாக இரண்டு மருத்துவர்கள் வந்துள்ளதாக லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மருத்துவமனை படுக்கையில் இருந்து தனது படத்துடன் இதனை தெரிவித்துள்ளார்.