fbpx

TRB முக்கிய அறிவிப்பு…! ஆன்லைன் மூலம் வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்…! முழு விவரம்…

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 – 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

TRIUMPHS தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக ( Full Time Ph.D Programme ) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023-2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://trb.tn.gov.in/ ) மேற்படி அறிவிக்கை 16.10.2023 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 15.11.2023 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சூப்பர் அறிவிப்பு...! 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் கட்டாயம்...! தமிழக அரசு உத்தரவு...!

Sat Nov 4 , 2023
1 முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும். இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024-2025 ஆம் கல்வியாண்டில 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும். ஆசிரியர்கள் கற்றல் விளைவுகள் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், வட்டார வளமைய […]

You May Like