அமைச்சர் பொன்முடி கேசுவலாக பேசி இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ”விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா..? நாமமா..? என்ற கேட்டு அதற்கு மோசமான விளக்கத்தை கொடுத்திருந்தார். சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை அமைச்சர் பொன்முடி புண்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாடகி சின்மயி மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி கேசுவலாக பேசி இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டோம். பேச்சுவாக்கில் Slip ஆகி இருக்கும். சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்ற உரிமை எனக்கு கிடையாது. பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். பொன்முடியின் கொச்சை பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Read more: Breaking| துணை பொதுச்செயலாளர் பதவில் இருந்து பொன்முடி நீக்கம்..!! – முதலமைச்சர் அதிரடி