fbpx

மகாராஷ்டிரா : பாஜக கூட்டணி ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது..!! – ராகுல் காந்தி விமர்சனம்

அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபா்கள் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். மூன்று முறை எம்எல்ஏவான இவா், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். நிா்மல் நகா் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை சம்பவமானது அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய்விட்டது என்பதையே அப்பட்டமாக காட்டுகிறது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பாபா சித்திக் படுகொலை சம்பவம் மிகவும் துயரமானது. இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையே இந்த கொடூர சம்பவம் வெளிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா அரசுதான் இந்த படுகொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என சாடியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு பாஜக தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், பாபா சித்திக்கை படுகொலை செய்தவர்களில் 2 பேர் உடனடியாகவே கைது செய்யப்பட்டுள்ளன. 3-வது கொலையாளியை கைது செய்யவும் மகாராஷ்டிரா தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. படுகொலை நிகழ்ந்து 24 மணிநேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்துவிட்டது மகாராஷ்டிரா அரசு. எவர் ஒருவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட முடியாது என்றார்.

Read more ; 33 வது பிறந்த நாளை கொண்டாடும் பீஸ்ட் பட நடிகை.. வாய்பிளக்க வைக்கும் சொத்து  மதிப்பு..!!

English Summary

Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi has condemned the assassination of former minister Baba Siddiqui who left the Nationalist Congress Party led by Ajit Pawar.

Next Post

மனைவி உட்பட 7 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர நபர்.. மாமியாரை கூட விட்டு வைக்கல..!! - 20 ஆண்டுகளாக அறங்கேறிய கொடூரம்..

Sun Oct 13 , 2024
A 54-year-old man in Novo Oriente, Brazil, has been arrested by police for sexually abusing his wife, seven children and mother-in-law for 20 years.

You May Like