fbpx

அப்படி போடு… ரேஷன் கடைகளில் இனி இதை எல்லாம் மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது…! தமிழக அரசு சார்பில் அதிரடி உத்தரவு….!

நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமானஅரிசியை மட்டுமே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசியப்பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும்.அரிசியின் தரத்தினை கிடங்குகளில் சரிபார்த்து, தரமான அரிசியை மட்டுமே நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்’ என அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழக அரசு சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் உதவித்தொகை…! எப்படி அப்பளை செய்வது…? முழு விவரம் இதோ…

Vignesh

Next Post

எல்லாம் ஜாலி தான்... அனைத்து அரசு மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு வரும் 10-ம் தேதி விடுமுறை...! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு...!

Sat Jul 30 , 2022
கோட்டை மாரியம்மன்‌ திருக்கோவில்‌ ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளூர்‌ விடுமுறை என மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கார்மேகம்‌ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம்‌ அருள்மிகு கோட்டை மாரியம்மன்‌ திருக்கோவில்‌ ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு, சேலம்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு 10.08.2022, புதன்கிழமை அன்று உள்ளூர்‌ விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர்‌ விடுமுறை […]

You May Like