fbpx

சூப்பரான திட்டம்‌..! விவசாயிகள் ஆடு, மாடு வாங்க ரூ.15,000 வரை மானியம் வழங்கும் தமிழக அரசு…!

விவசாயிகளின்‌ வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, தமிழக சட்டமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில்‌, நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்‌ எனும்‌ தலைப்பில்‌, பயிர்‌ சாகுபடியுடன்‌, கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்‌ கோழிகள்‌, தீவனப்‌பயிர்கள்‌, மரப்பயிர்கள்‌, தேனீ வளர்ப்பு, மண்‌ புழு உரத்‌ தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித்‌ தோட்டம்‌ போன்ற வேளாண்‌ தொடர்பான பணிகளையும்‌‌ சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம்‌ ரூபாய்‌ மானியம்‌ வீதம்‌, 13 ஆயிரம்‌ ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வழங்கப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில்‌, பயிர்‌ சாகுபடியுடன்‌ வேளாண்‌ சார்ந்த அனைத்து வகையான பணிகளையும்‌ 1 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்கம்‌ அமைப்பதற்கு, 50 சதவிகித மானியம்‌ வழங்கப்படும்‌. அதாவது, ஊடு பயிர்‌ அல்லது வரப்புப்பயிர்‌ சாகுபடிக்கு ரூ.5,000, கறவை மாடு அல்லது எருமை மாடு ஒன்று வாங்குவதற்கு ரூ.15,000, பத்து ஆடுகள்‌ வாங்குவதற்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது.

மேலும் பத்து கோழிகள்‌ வாங்குவதற்கு ரூ.3,000, இரண்டு தேனீப்‌ பெட்டிகளுக்கு ரூ.3,200, 35 பழமரக்‌ கன்றுகளுக்கு ரூ.2000, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக பத்து சென்ட்‌ பரப்பில்‌ தீவன பயிர்கள்‌ சாகுபடி செய்வதற்கு ரூ.800, மண்புழு உரத்தொட்டி அமைப்பதற்கு ரூ.6,000, ஆக மொத்தம்‌ ஒரு எக்டரில்‌ ஒருங்கிணைந்த பண்ணையத்‌ திடல்‌ அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக 50,000 ரூபாய்‌ வழங்கப்படுகிறது.

English Summary

Let’s take a look at the subsidies provided by the Tamil Nadu government to people involved in the agricultural industry.

Vignesh

Next Post

இன்று தை வெள்ளிக்கிழமை..!! சாம்பிராணியுடன் இந்த பொருளை சேர்த்து தூபம் போட்டால் கண் திருஷ்டி நீங்கும், தெய்வ அருள் நிலைக்கும்..!!

Fri Jan 24 , 2025
If you burn incense mixed with frankincense and basil, obstacles to work and marriage will be removed.

You May Like