fbpx

பாதுகாப்பான டாப் 10 நகரங்கள்!… அடுத்தடுத்த இடங்களை பிடித்த தமிழ்நாடு மாவட்டங்கள்!

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 78.2 என்ற குற்ற விகிதத்துடன் (IPC rate) இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக நீடிக்கிறது. இந்தியாவில் பல நகரங்கள் பாதுகாப்பாக வசிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த நகரங்கள் குறைந்த குற்ற விகிதங்கள் அடிப்படையில் பாதுகாப்பானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை அங்கு வசிப்பவர்களுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன.

சட்ட அமலாக்கம், சமூக ஈடுபாடு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை இந்த நகரங்களின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. இதனால், குற்றங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமின்றி பாதுகாப்பு உணர்வும் ஏற்படுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) என்பது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் உள்ளூர் சட்டங்கள் (SLL) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் உள்ள அரசாங்க அமைப்பாகும்.

இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. கொல்கத்தாவுக்கு அடுத்த 2வது பாதுகாப்பான நகரமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை விளங்குகிறது. சென்னையில் குற்ற விகிதம் 178.5 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு நகரமான கோயம்புத்தூர் பிடித்துள்ளது. கோவையில் குற்ற விகிதம் 211.2 ஆக உள்ளது.

Kokila

Next Post

மக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!… பொய்யான கடன் விளம்பரங்கள் பார்த்து ஏமாறாதீர்கள்!

Tue Dec 12 , 2023
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கடன்களை ரத்து செய்வதாக கூறி கடன் வாங்குபவர்களை ஏமாற்றும் கடன் தள்ளுபடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடன்களை தள்ளுபடி செய்வதாக, இந்த நிறுவனங்கள் அச்சு மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் தங்கள் விளம்பரங்களை முழு மூச்சாக செய்து மக்களை கவர்ந்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் இந்த தவறான பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் இருக்கவும், எச்சரிக்கையாக இருக்க […]

You May Like