fbpx

LKG & UKG சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும்…! ஓ.பி.ஸ் கோரிக்கை…!

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.

இது குறித்து ஓ.பன்னீசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஃ; தமிழகத்தில் 2,381 எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளிக் கல்வித்துறை ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், மேற்படி சிறப்பாசிரியர்களுக்கான மாதச் சம்பளம் ரூ.5,000 என்றும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களுக்கு போதுமான கல்வித் தகுதி இல்லையென்றால் தொடக்கக் கல்வியில் பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களுடைய பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆசிரியருக்கு மாத ஊதியம் ரூ.5,000 என்றால், ஓரு நாள் சம்பளம் என்பது வெறும் ரூ.166 குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்படி திறன்மிகு பணியாளர்களுக்கும், திறன்பெறாத பணியாளர்களுக்கும் அரசால் ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதில், அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ.300 மேல்தான் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.281 ஊதியம் வழங்கப்படுகின்றது. ஆனால், சிறப்பாசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.166 என்பது இயற்கை நியதிக்கு முரணானது என்பதோடு மட்டுமல்லாமல் சட்டத்திற்கும் எதிரானதாக உள்ளது.

தனியார் பள்ளிகளில் கூட இதைவிட அதிக அளவு ஊதியம் கொடுப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அரசே தனியார் நிறுவனம் போல் செயல்படுவது வருந்தத்தக்கது. இந்த ரூ,5,000 என்பது அவர்களுக்கான வாழ செலவிற்கே போதுமானதாக இருக்காது. குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட அரசு தரவில்லையென்றால், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். எனவே அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சரை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார.

Vignesh

Next Post

டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் மரணம்..? குழப்பத்தை ஏற்படுத்திய பதிவு..!! அது உண்மையிலேயே..!!

Sun Oct 9 , 2022
கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானதாக தகவல் வெளியானது. அது உண்மையா? என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களை விளையாடி வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான டேவிட் மில்லர் நேற்று ஒரு புகைப்படத்தை ஸ்டேட்டசாக வைத்துள்ளார். அது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் சிறுமி ஒருவருடன் இருப்பது போன்றும், அதில், […]
டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் மரணம்..? குழப்பத்தை ஏற்படுத்திய பதிவு..!! அது உண்மையிலேயே..!!

You May Like