fbpx

செம வாய்ப்பு…! குறைந்த வட்டியில் ரூ.10,000 வரை கடன் தொகை பெறலாம்…! தமிழக அரசு அறிவிப்பு…!

புயல் பாதித்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12-ம் தேதி வரை சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம் நடைபெற உள்ளது ‌

இது அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழக முதல்வர் அறிவுரையின்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டிற்கான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் ‘முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்’ எனும் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் காஞ்சிபுரம். திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை ரூ.10,000 வரை வழங்கப்படும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெருவியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் (புயலால் பழுதடைந்த ஆட்டோவினை சீரமைக்க), அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள்/சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்.

இக்கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் ஒரு வருட காலத்திற்குள் உரிய வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் அல்லது மாதந்தோறும் ரூ.1000 வீதம் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்தலாம். ‘முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்’ முகாம்கள் நான்கு மாவட்டங்களிலும் இன்று முதல் 12.01.2024 வரை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திருநங்கை முன் மாதிரி விருது பெற விண்ணப்பம் வரவேற்பு...! முழு விவரம் இதோ...!

Fri Jan 5 , 2024
திருநங்கையருக்கான முன் மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; திருநங்கையர் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர். மேலும் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 அன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1,00,000/- க்கான காசோலை மற்றும் […]

You May Like