கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான 14.03.2025-ம் தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஒசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் (கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான 14.03.2025- தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஓசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் 22.03.2025 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881) -என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.