கடலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி இரவு வேளையில் ரயில்வே பாதை அருகில், அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். வழக்கம் போல் நேற்று நள்ளிரவிலும் அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் ரயில்வே பாதை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு திடீரென்று வந்த ரயிலால் செய்வது அறியாது திகைத்துப் போன நொடிகளில் இருவரின் மீதும் ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.