fbpx

அந்தமான் கடலில் 26-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

"கூந்தல் ஆரோக்கியத்திற்கு…" எளிய முறையில் பயோடின் ஸ்மூத்தி செய்வது எப்படி.? எளிமையான ரெசிபி இதோ.!

Fri Nov 24 , 2023
கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சருமம் பளபளப்பாக இருக்க நட்ஸ் வச்சு பிரிப்பேர் பண்ற இந்த சூப்பரான மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபியும் ரொம்ப சிம்பிள்.முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 4 அத்திப்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் கிஸ்மிஸ், ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி, ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட், ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளு ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகள் மற்றும் […]
Smoothie

You May Like