fbpx

பிரதமர் வேட்பாளர் லிஸ்டில் மு.க.ஸ்டாலின்…! இன்று நடைபெறும் கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம்…!

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், 7ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.

இக்கூட்டத்தில், கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இறுதிக் கட்ட வாக்குப் பதிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இண்டியா கூட்டணி உருவாகுவதில் முக்கிய பங்காற்றிய திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சார்பில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக முதல்வர் இன்று காலை 7 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படவுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுகிறார். ராகுல் காந்தியும் தனக்கு பிரதமராக ஆசையில்லை எனக் கூறிவிட்டார். இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்து விட்டதால் கூட்டணி கட்சிகளின் அடுத்த முக்கிய தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Vignesh

Next Post

உங்கள் கிச்சன் எப்போதும் சுத்தமா இருக்க வேண்டுமா? இந்த விஷயங்களையெல்லாம் பண்ணுங்க!!

Sat Jun 1 , 2024
ஒரு வீட்டின் மையமே கிச்சன்தான். அதை வைத்தே வீட்டை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம். சமையலறை தினந்தோறும் பயன்படுத்தும் இடம் என்பதால், அதனை சுத்தமாக வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியமான விஷயம். எனவே, வீடுகளில் கிச்சனை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். வாஸ்து படியும், கட்டிட நிபுணர்களின் அறிவுறுத்தல் படியும், சமயலறை காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் புகை வெளியேற எளிதாக இருக்கும். சமையல் மேடை […]

You May Like