அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது..
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நிலை காரணம் காட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 16-ம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல். சுந்தரேசன் ஆஜராகினர். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பிலான வாதங்களை முன் வைத்தனர்.
ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கையின்படி செந்தில் பாலாஜி வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெற தேவையில்லை. ஜாமீனில் வெளியில் வந்தால் செந்தில் பாலாஜி ஆதாரங்களை கலைப்பார். இதனால் வழக்கு பலவீனமாகும், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் உள்ள ஆவணங்கள் படி சுமார் ரூ.67 கோடி சட்ட விரோத பண இருப்பது தெரியவந்துள்ளது என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை முதன்மை அமர்வு நீதிபதியிடம் தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.