மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்தக் கொலை தொடர்பாக எட்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றன.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன்(44). இவர் ஜெய் ஹிந்த்புரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். மேலும் இந்து மக்கள் கட்சியின் மதுரை தென் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடை அடைத்து விட்டு வந்த அவரை எட்டு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் வழிமறித்து அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவிட்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். காவல்துறையின் தீவிரமான தேடுதல் வேட்டையில் போலீஸ் ஏட்டு உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதை காவல்துறை உறுதி செய்திருக்கிறது. அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்ட காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது .
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக ஏட்டு ந்ஹரிபாபு உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதில் ஏட்டு ஹரிஹரபாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மனைவிக்கும் மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதனை நேரில் கண்டதால் ஆத்திரமடைந்த அவர் கூலிப்படையினரை ஏவி மணிகண்டனை கொலை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து போலீசார் இன்னும் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.