fbpx

மறைந்த ‘முரசொலி’ செல்வத்தின் உருவப் படத்துக்கு மகாராஷ்டிரா ஆளுநர் மரியாதை…!

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உருவப் படத்துக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று ‘முரசொலி’ செல்வத்தின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி செல்வம், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகனும் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியின் முன்னாள் ஆசிரியருமான ‘முரசொலி’ செல்வம், கடந்த 10-ம் தேதி காலமானார். முதலமைச்சர்களின் உறவினராக இருந்தாலும்கூட, எவ்வித பதவியையும் விரும்பாதவர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலி நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்த ‘முரசொலி’ செல்வம், மிக அமைதியானவராக அறியப்பட்டவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மைத்துனர் என்றபோதும், தி.மு.க.விலோ, அரசிலோ எவ்வித பதவிகளையும் வகிக்காதவர்.

English Summary

Maharashtra Governor pays homage to late ‘Murasoli’ Selvam’s portrait

Vignesh

Next Post

நோட்...! குரூப்-4 காலி பணியிடங்கள் அதிகரிப்பா...? TNPSC கொடுத்த விளக்கம்

Mon Oct 14 , 2024
TNPSC has urged people not to believe rumors circulating on social media regarding Group-4 vacancies.

You May Like