மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு பொது கழித்துறை இருந்தது. இந்த கழிப்பறைக்கு அருகில் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வருகின்றார். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அந்தப் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளார்.
மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது அருகில் படுத்து உறங்கிய இரண்டு மாத குழந்தை காணாமல் போனது. இது பற்றி அக்கம் பக்கத்தில் அவர் விசாரித்து விட்டு பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு சென்ற நபரை கண்டறிந்தனர். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் முகமது ஹனீப் என்ற அந்த நபர் தனது மனைவியுடன் சேர்ந்து குழந்தை பிறக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
அதற்காக இந்த குழந்தையை அவர் கடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை காணாமல் போன 24 மணி நேரத்தில் உடனடியாக குழந்தையை மீட்டு போலீசார் அந்த பெண்ணிடம் ஒப்படைத்தது பாராட்டுகளை பெற்று வருகிறது.