சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளிதான் தான் என மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜேத்மலானி கருத்து தெரிவித்துள்ளார்.
மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சமிபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்தது.
புகார்தாரர் புர்னேஷ் மோடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை பாஜக எம்பியுமான மகேஷ் ஜேத்மலானி கூறியதாவது; ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளிதான். இருப்பினும் அதிகபட்ச தண்டனைக்கான காரணங்கள் போதுமானதாக இல்லாததால் தகுதி நீக்கம் போன்றவை நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகாவின் கோலாரில் நடந்த பேரணியில், ராகுல் காந்தி மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.