அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23-ம் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலே நேற்று ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்றபோது கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவி பலாத்கார வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை காவல்துறையினர் நேற்று கைதுசெய்தனர்.