fbpx

“உன் குரலை கேட்கணும்.”! வாட்ஸ் அப்பில் வெளியான புகைப்படம்.! கணவன் எடுத்த துயர முடிவு.!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டோம்பிவலி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தூக்கு போடும் புகைப்படங்களை மனைவிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையின் டோம்பிவலி பகுதியில் வசித்து வந்தவர் சுதாகர் யாதவ். 41 வயதான இவருக்கு திருமணமாகி சஞ்சனா என்ற மனைவி இருக்கிறார். நிலையில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கணவன் மற்றும் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமடைந்த சஞ்சனா கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

இதனால் மனம்முடைந்த சுதாகர் யாதவ் கடும் விரக்தியில் இருந்திருக்கிறார். மேலும் தனது மனைவிக்கு போன் செய்த அவர் உன்னுடைய குரலை 2 நிமிடங்களாவது கேட்க வேண்டும் என கூறி இருக்கிறார். மனைவியிடம் பேசிய பின்பு தற்கொலை செய்து கொள்வதற்கு ஆயத்தமாகும் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலமாக மனைவிக்கு அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தனது நண்பரை அனுப்பி கணவரை பார்க்கச் சொல்லி இருக்கிறார்.

சஞ்சனாவின் நண்பர் வீட்டிற்கு வந்து குரல் கொடுத்தும் பதில் இல்லாததால் கதவை உடைத்து சென்று பார்த்தபோது சுதாகர் யாதவ் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த சுதாகர் யாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

ஆள் கடத்தலா?… 300 இந்தியர்களுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!… பிரான்சில் பரபரப்பு!

Sat Dec 23 , 2023
ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் 300 இந்தியர்களுடன் சென்ற விமானம் அவசர அவரமாக பிரான்சில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 300+ இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா என்ற நாட்டிற்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் ஆள் கடத்தல் சம்பவம் நடந்ததாகச் சந்தேகத்தின் பேரில் தரையிறக்கிய பிரான்ஸ் போலீசார் இது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும் இந்திய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

You May Like