fbpx

திருச்சி: மீண்டும் ஒரு உயிரைக் காவு வாங்கிய செல்போன் கேம்..! காவல்துறை விசாரணை.!

திருச்சி நகரில் செல்போன் கேம் விளையாடிய நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாநகரில் அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் (47). இவர் பொன்மலையில் அமைந்துள்ள ரயில்வே தொழிற்சாலையில் டெக்னீசியன் ஆக பணியாற்றி வந்தார். சதீஷ் செல்போனில் கேம் விளையாடும் பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. தொடர்ந்து செல்போனில் சூதாட்ட கேம்கள் விளையாடி வந்ததால் பண நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகரித்து இருக்கிறது.

இதனால் கடந்து சில மாதங்களாகவே தீவிர மன உளைச்சலில் இருந்திருக்கிறார் சதீஷ். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த சதீஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் கேமால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

முதுநிலை மருத்துவர்கள்..!! அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்வு..!! அரசாணை வெளியீடு..!!

Fri Jan 12 , 2024
முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது. எம்.டி., எம்.எஸ். மற்றும் பிஜி டிப்ளமோ ஆகிய பிரிவுகளில் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புகள், சர்வீஸ் கேண்டிடேட் மற்றும் நான் சர்வீஸ் கேண்டிடேட் என்று பிரிக்கப்பட்டு வருகிறது. சர்வீஸ் கேண்டிடேட் என்பவர்கள் அந்த மருத்துவ கல்லூரியிலேயே படித்து பணியாற்றுபவர்கள். நான் சர்வீஸ் […]

You May Like