fbpx

திக் திக் சம்பவம்.! டையாப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்ட 17 தோட்டாக்கள்.! தீவிரவாத சதியா.! ஏர்போர்ட்டில் பரபரப்பு.!

விமான நிலையத்தில் குழந்தைகள் அணியும் டையாப்பருக்குள் துப்பாக்கி குண்டுகள் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பயணியிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் சிகாகோ செல்ல இருக்கும் பயணிகளுக்கான பரிசோதனை நடந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் கைப்பையை பரிசோதனை செய்தபோது குழந்தைகள் அணியும் டையாப்பரில் 17 துப்பாக்கி குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 17, 9 எம்எம் துப்பாக்கி தோட்டாக்களை அவர் டையாப்பரில் மறைத்து வைத்திருந்திருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கி குண்டுகள் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது தனக்கு கூறி இருக்கிறார்.

ஒருவேளை தனது காதலி மறைத்து வைத்திருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். அவரது பதில்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருப்பதால் அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

மக்களே எச்சரிக்கை!… உங்க வீட்டுக்கும் வருமான வரித்துறை ரெய்டு வரும்!… விதிகளை அறிந்துகொள்ளுங்கள்!

Sun Dec 24 , 2023
கொரோனா காலத்திலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இப்போது மக்கள் பெரும்பாலான பரிவர்த்தனைகளை UPI மற்றும் டெபிட்-கிரெடிட் கார்டுகள் மூலம் செய்கிறார்கள். ஆனால் மக்கள் இன்னும் பணமாக பரிவர்த்தனை செய்ய விரும்புகிறார்கள். இதற்கு ஏடிஎம்மில் இருந்து ஒரே நேரத்தில் அதிகப் பணம் எடுக்கிறார்கள். ஆனால் வீட்டில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச பணம் எவ்வளவு தெரியுமா (Cash Limit at Home). இந்த தகவலை வைத்திருப்பது கட்டாயமாகும், ஏனெனில் உங்களிடம் வரம்பை […]

You May Like