மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், 31 வயதான இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதான மனைவி உள்ள நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கமாக இஸ்மாயில் மனைவி, பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்களுடன் நடைபயிற்சி செல்வது உண்டு. சில நேரங்களில், பக்கத்து வீட்டு பெண்கள் நடைபயிற்சிக்கு வராத பட்சத்தில் இஸ்மாயில் மனைவி தனியாக நடைபயிற்சி செல்ல ஆரம்பித்துள்ளார். தனது மனைவி தனியாக நடைபயிற்சி செல்வது இஸ்மாயிலுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தனது மனைவியிடம் தனியாக நடைபயிற்சி செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவி எதையும் கண்டுக்கொள்ளாமல் தனியாக சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்மாயில், தனது மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்று தனது மனைவியை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாக்காத இஸ்மாயிலின் மனைவி, பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து அவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறையை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. ஆனாலும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது மட்டும் இன்னும் முழுமையாக நின்றபாடில்லை. ஆனால் மத்திய அரசு தடை விதித்த பிறகு நாட்டில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் சம்பவங்கள் 82 சதவீதம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், தடையை மீறி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்பவர்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: “சொந்த அண்ணனை சைட் அடிப்பியானு கேப்பாங்க..” சூர்யாவின் தங்கைக்கு நேர்ந்த சம்பவம்..