மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சிவசங்கர் தத்தா. இவருக்கு 36 வயதான புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், சிவசங்கர் தத்தா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறும் போது, வீட்டில் தனது மனைவி புஷ்பாவும் தனது மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிவசங்கர் தத்தா, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். , சிவசங்கர் தத்தாவின் பதில்களை கேட்டு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தனது மனைவி மகனை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், தனது மனைவி தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒருவருடன் பழகுவதாக சிவசங்கருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி, அவர் நைலான் கயிற்றை வைத்து தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இவர் செய்த கொலையை அவரது மகன் பார்த்துவிட்டார். இதனால் தனக்கு பிரச்சனை வந்துவிடும் என்ற பயத்திலும், ஆத்திரத்திலும், சிவசங்கர் தனது மகனையும் கொலை செய்துள்ளார்.
சிவசங்கர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: 10 வயது சிறுவன் மீது ஏற்பட்ட ஆசை; தனி அறைக்கு அழைத்து சென்று, ஆசிரியை செய்த காரியம்..