கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல என்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் கவிதா என்ற பெண்ணின் மீது அவருடைய கணவர் திராவகத்தை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்கத்தில் காயமடைந்த கவிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதோடு திராவக வீச்சு சம்பவத்தை தடுக்க முயற்சித்த வழக்கறிஞர் மீதும் திராவகம் பட்டதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற சில வாரங்களுக்கு முன்னர் தான் நீதிமன்ற வளாகம் அருகே 2 இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில்தான் தற்சமயம் நீதிமன்ற வளாகத்திலேயே பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.