fbpx

பல ஆண்டுகளாக, மகளை பலாத்காரம் செய்து வந்த தந்தை; கோர்ட்டின் தீர்ப்பால் ஆடிப்போன குற்றவாளி..

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதியில், நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 17 வயதான வளர்ப்பு மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், இவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் எல்லாம், தனது மகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். மகளின் பயத்தை தனக்கு சாதகம் ஆக்கிக்கொண்ட தந்தை, தனது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மகளும், பயத்தில் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், தன்னால் தனது தந்தையின் கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல், அவரது தோழியிடம் கூறியுள்ளார். அப்போது அவரது தோழி, இதை மறைக்காமல் உனது தாயிடம் சொல், அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

அவரது தோழியின் ஆலோசனைப்படி, சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஷ்ரப் ஏஎம், போக்சோ, ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ், அவருக்கு 141 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதில் அதிகபட்ச தண்டனையாக அவர் 40 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மற்ற ஆண்டுக்கான சிறை தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அத்துடன் ரூ.7.85 லட்சம் அபராதம் செலுத்தவும், நீதிபதி அஷ்ரப் தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்டவரும் அவரது வளர்ப்பு மகளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

Read more: வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..

English Summary

man-who-raped-her-daughter-for-many-years-was-sentenced-for-141-years

Next Post

பேக்கேஜ்டு வாட்டர் அதிக ஆபத்துள்ள உணவு வகையில் சேர்ப்பு..!! - FSSAI உத்தரவு

Mon Dec 2 , 2024
FSSAI classifies packaged drinking water under 'high risk' food categories

You May Like