fbpx

MANIPUR| மணிப்பூர் கலவரம்: உயர் நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு.!

மணிப்பூர் (Manipur) மாநிலத்தில் இரண்டு பழங்குடியின மக்களிடையே கடத்த ஒரு வருடம் ஆக மிகப்பெரிய மோதல் நடைபெற்று வருகிறது. இந்த வன்முறை சம்பவங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த கலவரத்தால் அம்மாநிலத்தில் அமைதி கேள்விக்குறியானது.

இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி வருவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் ராணுவமும் தீவிர முயற்சியில் இறங்கி வருகிறது. இந்நிலையில் மெய்தி இன மக்களை பழங்குடியினராக சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு செய்த பரிந்துரையை வாபஸ் பெறுவதாக அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களை பழங்குடியினராக சேர்த்து அவர்களுக்கும் அரசின் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. இதற்கு அந்த மாநிலத்தின் மற்றொரு பழங்குடியின மக்களான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய கலவரம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு காண்பதற்காக மணிப்பூர் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்ததை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. மெய்தி இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வழங்கிய பரிந்துரையை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

English summary: The High Court has announced that it will quash the recommendation to include the Meithi people in the tribal list.

Read More: AVATAR: ‘தி லாஸ்ட் ஏர்பெண்டர்’ கற்பனைத் தொடரின் விமர்சனம்.! Netflix-ல் முதல் பாகம் வெளியீடு.!

Next Post

"சொன்னது 100 நாள் ஆனால் நடந்தது.. திமுக எப்போதுமே சொல்றத செய்யாது" - ஆளும் கட்சியை விமர்சனம் செய்த ஈபிஎஸ்.!

Thu Feb 22 , 2024
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் அதன் மீதான விவாதம் நடைபெற்ற பிறகு சட்டப்பேரவை முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக தனது தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். இதற்கான தீவிரமான களப்பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். […]

You May Like