சென்னை மாநகர பகுதியில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலமானது தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
சடலமானது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளார். உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்த நிலையில் தலையை வேறொரு பகுதியில் காவல்துறையினரால் தேடி கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல் பல காயத்துடன் இருப்பதால் இவரை கொலை செய்து இவ்வாறு தலையை துண்டித்து இருக்க கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்காக தனிப்படை ஒன்றை அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.