அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மேஷ் படேல் தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் டெஸ்லா காரில் டெவில்ஸ் ஸ்லைடு மலைக்கு சென்றார்.
கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து உள்ளே இருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்குப் பிறகு, கணவர் படேல் காரை ஓட்டி வந்ததும், அவர் வேண்டுமென்றே காரை பள்ளத்தாக்கில் கவிழ்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் கணவர் படேல் தன்னையும், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த பிரையன் போய்டிங்கர் கூறுகையில், இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். ஆனால் இரண்டு குழந்தைகளும் சிறிய காயங்களுடன் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
அதன்பிறகே எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது என்றார். இரண்டு குழந்தைகளின் தந்தை படேல் மீது கொலை, குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.