கனமழை காரணமாக மயிலாடுதுறையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.