கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும். நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை குறுமரம் வகையைச் சேர்ந்தது.
கறிவேப்பிலையில் கீழ் காணும் 12 விதமான மருத்துவ பயன்கள் உள்ளன.
1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. 2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. 3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. 4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. 5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது. 6) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. 7) கல்லீரலைப் பாதுகாக்கிறது. 8) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. 9)நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது. 10) முடியை வலுவாக்குகிறது. 11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது. 12) செரிமான மண்டலத்திற்கு நல்லது.
பல பிரச்சனைகளுக்கு தீர்வை மருத்துவமனைகளில் தேடி அலைகிறோம். ஆனால் நம் வீட்டு சமையலறையிலேயே ஏராளமான மருத்துவ ரகசியங்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பதுதான் உண்மை.