fbpx

மாதத்தில் 2 முறை மாதவிடாய் வருகிறதா.? காரணம் மற்றும் தீர்வுகள் என்ன.?

மாதவிடாய் என்பது பருவமடைந்த பெண்களுக்கு இயற்கையாக நடக்கக்கூடிய ஒன்றாகும். இது ஒவ்வொரு மாதத்திலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்று. மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் சிலருக்கு அரிதாக ஒரு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்படலாம். இது மிகவும் அரிதாக நடக்கக் கூடிய ஒன்று. அவ்வாறு நடந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம் என தெரிவிக்கிறார்கள் பெண்கள் நல மருத்துவர்கள்.

மாதவிடாய் நாட்கள் முடிந்த பின்பு மீண்டும் இரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருந்தால் அதனை பரிசோதனை செய்ய வேண்டும். சில நேரங்களில் ரத்தப்போக்கு இல்லாமல் ரத்தக் கசிவு மட்டும் இருக்கும். இது உடலுறவுக்கு காரணமாகவோ அல்லது கருச்சிதைவு காரணமாகவோ ஏற்பட்டதாக இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் மாதவிடாய் முடிகின்ற நேரத்தில் மீண்டும் இரத்தப் போக்கு ஏற்படலாம். இதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் காலம் வருவது தொடர்ந்து நடந்தால் பெண்கள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது கட்டாயமாகிறது ஏனெனில் தைராய்டு போன்ற பிரச்சனைகளாலும் கருத்தடை மாத்திரைகள் மற்றும் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்காக சாப்பிடப்படும் மாத்திரைகள் ஆகியவற்றால் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு மாதம் இருமுறை மாதவிடாய் வரலாம். இதனை தடுப்பதற்கு முறையான மருத்துவம் அவசியம். மேலும் இருமுறை மாதவிடாய் என்பது ஹார்மோன் மாற்றங்களால் எப்போதாவது அரிதாக நடக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

Next Post

பட்டு போன்ற சருமம் வேண்டுமா.? நீங்க சமையலுக்கு யூஸ் பண்ற இந்த பொருட்களே போதும்.! குட்டி ப்யூட்டி டிப்ஸ்.!

Thu Dec 28 , 2023
சருமத்தின் அழகை பேணி பாதுகாப்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். சருமம் பொலிவுடன் பளபளப்பாகவும் இருப்பது நமது முகத்தோற்றத்தை வசீகரமாக மாற்றுவதோடு நமது மனதிற்கு தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அழகு சாதன நிலையங்களுக்கு சென்று அதிக பொருட்செலவில் நமது அழகை மெருகேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டில் பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே முகத்தை ஜொலிக்க வைக்கலாம். முகத்தின் அழகை பேணுவதில் பாலாடை முக்கியப் […]

You May Like