fbpx

55.16 அடியாக சரிந்தது மேட்டூர் அணையின் நீர்மட்டம்….!

ஏற்கனவே கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அதாவது, எங்கள் மாநிலத்தில் இருக்கும் பாசனத்திற்கே தண்ணீர் இல்லை, இதில், தமிழகத்திற்கு எப்படி நாங்கள் தண்ணீர் தர முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக ஆட்சியில் இருந்தபோது கூட, தமிழகத்திற்கு நீர் தர மாட்டோம் என்று இந்த அளவிற்கு விடாப்பிடியாக இருக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் தற்போது அங்கே ஆட்சி அமைத்திருக்கின்ற நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் தருவது கெடுபிடியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்திருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.54 அடியில் இருந்து, 55.16 அடியாக குறைந்திருக்கிறது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு வினாடிக்கு 5,140 கன அடியிலிருந்து 3,056 கன அடியாக சரிந்திருக்கிறது.

அணையில் இருந்து, காவேரி டெல்டா பாசனத்திற்கு, ஒரு வினாடிக்கு, 6000 கன அடி வீதம், தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 21.21 டிஎம்சியாக இருக்கிறது.

Next Post

வந்தது உத்தரவு...! அனைத்து அங்கன்வாடி மையங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்...!

Sun Aug 13 , 2023
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு புகலிடங்களாகச் செயல்படுகின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் அத்தகைய வாய்ப்புகள் கிட்டாத குழந்தைகளுக்கு அவர்களின் நிலை அறிந்து சேவை செய்வது என்பது மிக […]

You May Like