fbpx

வயிறு வலின்னு மருத்துவமனை சென்று நெஞ்சுவலியில் இறந்த வாலிபர்! தவறான சிகிச்சையில் பலியானாரா?

வண்டலூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லி குமார் வயது 48. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்பநாயகி என்ற மனைவியும் பரத் குமார் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பரத்குமாருக்கு வயிற்று வலி ஏற்படவே உறவினர்கள் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரத் குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அப்பண்டிக்ஸ் இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினார். இந்நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்து விட்டதாக அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் உதவி போலீஸ் கமிஷனர் அதிவீரபாண்டியன் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் டாக்டர்களின் தவறான சிகிச்சையினால் பரத்குமார் உயிரிழந்துவிட்டதாகவும் இது போன்ற ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழப்பதை தடுக்க இது போன்ற மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவவே அப்பகுதிக்கு அதிவிரைவு காவல் படை வரவழைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடமும் விசாரணை செய்தது போலீஸ். இது குறித்து கூறிய மருத்துவமனையின் முதல்வர் பரத் குமாருக்கு ஏற்கனவே தைராய்டு பிரச்சனை இருந்துள்ளது அதற்கு முன் அவர் வாந்தியெடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் அப்பன்டிஸ் பிரச்சனையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து கொடுத்த போது ஒவ்வாமை ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தோம் அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. இதில் மருத்துவர்களின் மேல் எந்த தவறும் இல்லை என கூறினார். சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

Baskar

Next Post

வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Tue Mar 21 , 2023
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வடசென்னையில் […]

You May Like