தமிழகத்தில் மிலாது நபி பண்டிகை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி இன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதிலாக இன்று மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது.
அதே போல, மிலாது நபி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றைய தினம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று அறிவிக்கப்பட்ட அனைத்து நேர்முக பணிகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக, இன்று நேர்முகப்பணிக்காக ஒதுக்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.