இத்தாலியில் ஆணுறைகளைக் கொண்டே முழுமையாக அலங்கரிக்கப்பட்ட பேஷன் ஷோ ஒன்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது. இத்தாலி நாட்டின் மிலன் நகரில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒரு வாரத்திற்கு பேஷன் ஷோ நடத்தப்படும். இந்த ஷோ ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வர இருக்கின்ற இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு இந்த ஃபேஷன் வாரம் நடத்துவது வாடிக்கையான ஒரு நிகழ்வாக இத்தாலியில் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டிற்கான மிலன் ஃபேஷன் வீக் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி இத்தாலியின் மிலன் நகரில் துவங்கியது.
இந்த ஆண்டு ஃபேஷன் வீக்கில் பாலின நேர்மறையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஃபேஷன் ஷோ நடைபெறும் அரங்கம் ஆணுறைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஆணுறைகளை பயன்படுத்தி பேஷன் ஷோ நடைபெறும் அரங்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரு விழிப்புணர்வுக்காக இவ்வாறான அலங்காரத்தை செய்திருப்பதாக விழா குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஃபேஷன் விழாவில் பங்கு கொண்ட மாடல் அழகிகள் ஆணுறைகள் வைக்கப்பட்ட இடங்களை சுற்றி கேட் வாக் வந்தனர். மிகவும் வித்தியாசமான முறையில் இருந்த இந்த அலங்காரம் உலகெங்கிலும் உள்ள ஃபேஷன் சோ ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.