fbpx

#கன்னியாகுமரி: மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் இராணுவ கணவர் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் இருந்த உறுக்கமான செய்தி..! 

கன்னியாகுமரி மாவட்டம் அம்பலத்துவிளை பகுதியில் வசித்து வருபவர் ராஜப்பன். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ் (33) என்ற மகன் உள்ளார். அனீஸ் ஃபேஸ்புக்கில் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்ல, அனீசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

நான்கு நாட்களுக்கு முன், கணவர் குடித்துவிட்டு பணம் கேட்டு துன்புறுத்தியதால், ரேஷ்மா தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று அனிஷின் தாய் செல்போன் மூலம் மகனை தொடர்பு கொண்டார். 

ஆனால் அனிஷ் அழைப்பை ஏற்கவில்லை. சந்தேகமடைந்த அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அனீஷ் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் எனது தற்கொலைக்கு நான் தான் காரணம் என எழுதியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

மாமியார், மருமகனுடன் போட்ட பிளான்.. விடியற்காலையில் இருவரையும் காணவில்லை..!

Wed Jan 4 , 2023
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகரா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர் தனது மூத்த மகள் கிஷ்னாவை நாராயணன் ஜோகிக்கு திருமணம் செய்து வைத்தார். நாராயணன் ஜோகி அடிக்கடி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது மாமியார், மருமகன் இடையே போலியான உறவு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் கடந்த 1ம் தேதி குடித்துவிட்டு வீட்டை […]

You May Like