fbpx

திருச்சி: “பெண்களை வீடியோ எடுத்த ராணுவ வீரர்..” செல்போன் முழுக்க ஆபாச படங்கள்..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

திருச்சி பகுதியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராணுவ வீரரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலாஜி. 31 வயதான இவர் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராணுவ வீரர் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவ வீரரின் செல்ஃபோனை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ராணுவ வீரர் ஜெயபாலாஜி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

மாலத்தீவில் வெளியேற்றப்படும் இந்திய ராணுவம்..!! அதிபர் முகமது முய்சு பரபரப்பு அறிவிப்பு.!

Mon Feb 5 , 2024
இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. பிரதமர் மோடி லட்சத்தீவு பற்றிய புகைப்படத்தை பகிர்ந்ததற்கு மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்தப் பிரச்சனையிலிருந்து இந்தியா மற்றும் மாலத்தீவு அரசுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாக இல்லை. இந்நிலையில் மாலத்தீவு நாட்டிற்கு சொந்தமான மீன் பிடி கப்பலில் இந்திய கடற்படை வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக மாலத்தீவு நாட்டின் […]

You May Like