பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நந்தினி பிராண்ட் பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று கர்நாடகா பால் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடகா பால் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு பால், சுபம், சம்ருத்தி, சந்துருத்தி, தயிர் உள்ளிட்ட ஒன்பது பால் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டபுள் டோன்ட் பால் ரூ.38, டோன்டு பால் ரூ.39, ஹோமோஜெனைஸ்டு டோன்ட் பால் ரூ.40, ஸ்பெஷல் பால் ரூ.45, ஷுபம் ரூ.45, சம்ருத்தி ரூ.50, சந்துருத்தி ரூ.52. நந்தினி தயிர் 47 ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.