fbpx

டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…..!

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து, கிருஷ்ணகிரி போய்க்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று, உடல்நல குறைவு உண்டானது. ஆகவே தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் பெங்களூருவில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷை, இன்று காலை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆகவே அவர் தன்னுடைய வாகனத்தில் சாலை மார்க்கமாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அமைச்சருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை அந்த தனியார் மருத்துவமனை வெளியிட்டது. அந்த அறிக்கையில், வயிற்றில், மேல் பகுதியில் வலி உண்டான காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

அத்துடன், அவருக்கு வலி நிவாரணிகள் மற்றும் திரவங்கள் மூலமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். தற்சமயம் அவர் நலமுடன் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Next Post

குடல் புழுக்களை இயற்கை முறையில் அழிக்க சூப்பர் டிப்ஸ்..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

Sun Aug 13 , 2023
நமது உடலில் புழுக்கள் வசிக்க அசுத்தமே காரணம். நாடாப்புழு, கொக்கி புழு, உருளை புழு, சாட்டை புழு என்று பலவிதமான புழுக்கள் உடலில் உள்ள குடலுக்குள் வசிக்கின்றன. இதனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், கை வைத்திய முறையில் குடலில் உள்ள அனைத்து பூச்சிகளையும் வெளியேற்ற வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். அவை என்னென்ன என்பதை இந்தப் […]

You May Like