அசைவம் சாப்பிடும் ராமர், சீதையை சைவம் சாப்பிடுபவர்களாக கம்பன் மாற்றியதாக அமைச்சர் துரைமுருகன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கம்பன் கழகம் சார்பில் 50வது ஆண்டு கம்பன் விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர். துரைமுருகன், ” சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களுக்குப் பின்புதான் அதை எழுதியவர்கள் பெயர் குறிப்பிடப்படும். ஒரு புகழ்பெற்ற காவியத்துக்கு முன்பு அதை எழுதியவரின் பெயர் இடம்பெற்றது கம்பராமாயணம் மட்டும் தான்.
தமிழில் 12 நூற்றாண்டுகளாக கம்பர் நிலைத்து வாழ்கிறார். தனது எழுத்தில் அறத்துக்கும் மறத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காட்டும் திறமை கம்பருக்கு மட்டும்தான் உள்ளது. வால்மீகி ராமரை ஒரு வீர மானிடராகவே படைத்தார். ராமர் சீதை அசைவம் சாப்பிடுபவர்களாக படைத்தார். ஆனால் கம்பர் அவர்களை சைவம் சாப்பிடுபவர்களாக, முழு சைவ ராமாயணமாக மாற்றிவிட்டார்” என்று கூறினார்.
Read more ; காசா-வில் உள்ள பள்ளி முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்..!! – 100 க்கும் மேற்பட்டோர் பலி