fbpx

தமிழக முதலமைச்சர் திடீர் உத்தரவு…! டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் குழு…!

மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த பருவம் தவறி பெய்த திடீர் மழை தற்போது குறைந்து வருகிறது. மேலும் நீரினை வடியவைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது சம்பந்தமாக ஏற்கெனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் முதல்நிலை ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், இதனை நேரடியாக ஆய்வு செய்வதற்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். இவர்களுடன் வேளாண்மைத் துறைச் செயலாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளையும் இந்தக் கள ஆய்வினை மேற்கொண்டு விவசாயிகளைச் சந்தித்துப் பேசி விபரங்களைப் பெற அறிவுறுத்தியுள்ளேன்.

நாளை இந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து, சேத விபரங்களை அறிந்து, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடுத் தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஜனவரியில் மட்டும் சுமார் 1 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர்.. ஷாக் ரிப்போர்ட்..

Sun Feb 5 , 2023
ஜனவரி மாதத்தில் மட்டும் உலகளவில் கிட்டத்தட்ட 1 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.. கடந்த ஆண்டு முதலே அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்ட பல பெரு நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன.. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அந்த வகையில் கடந்த மாதம் ஐடி ஊழியர்களுக்கு மிகவும் மோசமான மாதமாக அமைந்தது. அதாவது உலகம் முழுவதும் உள்ள 288க்கும் மேற்பட்ட […]

You May Like