விதிமுறைகளை குற்றமற்றதாக்கும் வகையில், கனிமச் சலுகை விதிகள் 1960-ல் மத்திய நிலக்கரி அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.அரசின் கொள்கையின்படி, எளிதாக வர்த்தகம் செய்வதை மேலும், ஊக்கப்படுத்துவதற்காக 68 விதிமுறைகளை குற்றமற்றதாக்கி திருத்தம் செய்துள்ளது.
10 விதிமுறைகளுக்கு அபராதமும் குறைக்கப்பட்டுள்ளது. தாமதமான வாடகைக் கட்டணம், ராயல்டி, கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகைக்கான வட்டி 24 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் நிலக்கரி சுரங்கத்துறையில் தேவையான பொருளாதார தளர்வுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.