சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதத்தில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும், அந்த சட்டங்களுக்கு இந்த குற்றங்கள் பயப்படுவதாக தெரியவில்லை. தொடர்ந்து, இது போன்ற குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது.அந்த விதத்தில், ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் பகுதியில் மூன்று சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மூன்று புகார்கள் தரப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழத்தி இருக்கிறது.
16 வயது பள்ளி சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபரின் இரண்டு மகள்கள் அதே பண்ணையில் வேலை பார்த்து வந்த இரண்டு பேரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, தற்சமயம் கர்ப்பமாகி இருக்கின்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அதோடு, அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அந்த இரண்டு நபர்களும், அந்த சிறுமிகளை கடுமையாக மிரட்டியதாகவும், இதன் காரணமாக பயந்து போன அந்த சிறுமிகள் இது பற்றி வெளியே சொல்லாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.ஆனாலும் நாட்கள் செல்ல, செல்ல வயிற்று வலியும், உடல் வலியும் அதிகரித்ததால் கதறி துடித்த அந்த இரு சிறுமிகளில் ஒருவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அந்த சிறுமி 7️ மாத கர்ப்பிணியாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அவருடைய தங்கையும் கர்பமாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
பின்பு இரண்டு சிறுமிகளையும் விசாரித்த போது, அவர்கள் நடந்த விபரம் அனைத்தையும் சொல்லிவிட, தற்போது அந்த இரண்டு குற்றவாளிகளும் தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். அந்த 16 வயது பள்ளி சிறுமியின் வழக்கு குறித்து சென்ற 27ஆம் தேதி அவர் பள்ளிக்கு சென்றபோது மயக்க மருந்து கொடுத்து அவரை கடத்திச் சென்று அந்த சிறுமியின் கற்பழிக்கப்பட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. அதில் தொடர்புடைய இரண்டு பேர் தொடர்பான வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது.