ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டமன்றம் கூடியதும் மக்களவை எம்.பி-யான இன்ஜினீயர் ரஷித்தின் சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை அங்கு காண்பித்தார். இதற்கு ஒரு பிரிவு MLA-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமர வற்புறுத்தினார். இருந்தாலும், அவர்கள் கேட்கவில்லை. பின்னர், ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவையை சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்.
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையில் சிறப்பு அந்தஸ்து தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், சட்டப்பேரவையில் சலசலப்பும், காரசாரமான வார்த்தைப் பரிமாற்றங்களும் நடந்தன.
Read More : Pension | எல்லாம் திருமணம் வரைக்கும் தான்..!! திருமணத்திற்கு பிறகு உங்கள் மகளுக்கு இதெல்லாம் கிடைக்காது..!!