உத்தரபிரதேச சட்டப் பேரவையில் புதிய விதிமுறைகள் நிறைவேற்றப்பட உள்ளது, இதன்படி உறுப்பினர்கள் தங்கள் மொபைல் போன்களை சபைக்குள் எடுத்துச் செல்லவோ, ஆவணங்களைக் கிழிக்கவோ, சபாநாயகரை நோக்கி போராட்டம் செய்யவோ, உட்காரவோ முடியாது.
இந்த புதிய விதிகளின்படி, எம்.எல்.ஏ.க்கள், சபையில் எந்த ஆவணத்தையும் கிழிக்க முடியாது. அவர்கள் உரை நிகழ்த்தும் போது கேலரியில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டவோ அல்லது பாராட்டவோ மாட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி போராட்டம் செய்யவோ, உட்காரவோ முடியாது.
மேலும் அவர்களால் சபையில் ஆயுதங்களைக் கொண்டுவரவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடியாது. உறுப்பினர்களால் புகைப்படம் எடுக்க முடியாது, அவர்கள் இருக்கையில் சத்தமாக பேசவோ சிரிக்கவோ முடியாது.