fbpx

இன்று முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு…!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு இன்று முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்.15-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. தேர்வுத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித குளறுபடியுமின்றி குறிப்பிட்ட காலத்துக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியரே அந்த மையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும். ஏதேனும் புகார் எழுந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப் பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Mock exam for 10th grade students from today to February 28th

Vignesh

Next Post

கவனம்!!! இந்த ஒரு பொருளை சாப்பிட கொடுத்து, உங்க குழந்தைங்க ஆயுசு நாட்களை நீங்களே குறைச்சுராதீங்க...

Sat Feb 22 , 2025
health-issues-caused-by-biscuits

You May Like